தமிழ்நாடு

tamil nadu

AUS vs IND: காயம் காரணமாக போட்டியின் பாதியில் வெளியேறிய உமேஷ் யாதவ்!

By

Published : Dec 28, 2020, 10:42 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளில் காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், போட்டியின் பாதிலேயே களத்திலிருந்து வெளியேறினார்.

AUS vs IND: Umesh Yadav suffers injury, hobbles off field
AUS vs IND: Umesh Yadav suffers injury, hobbles off field

மெல்போர்னில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணி 321 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை முடித்திருந்த நிலையில், 131 ரன்கள் பின்தங்கி ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து வருகிறது.

இப்போட்டியின்போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தனது நான்காவது ஓவரை வீசும்போது காயமடைந்தார். உடனே களத்திற்கு வந்த மருத்துவர்கள் உமேஷ் யாதவை பரிசோதனை செய்தனர். பின்னர் அவரது காயம் குறித்த அடுத்தகட்ட பரிசோதனைக்காக உமேஷ் யாதவ், போட்டியின் பாதியிலேயே களத்திலிருந்து வெளியேறினார்.

இதையடுத்து உமேஷ் யாதவின் ஓவரை முகமது சிராஜ் நிறைவுசெய்தார். இருப்பினும் உமேஷ் யாதவின் காயம் குறித்த சரியான தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது அனுபவ வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவும் காயமடைந்திருப்பது இந்திய அணிக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸின் விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:துபாய் டி’ ஓர்: ரொனால்டோ, லெவாண்டோவ்ஸ்கிக்கு விருது!

ABOUT THE AUTHOR

...view details