தமிழ்நாடு

tamil nadu

Ashes Test: இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை!

By

Published : Jul 29, 2023, 7:54 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 295 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஷஸ் டெஸ்ட்
ashes test

லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி நேற்று முன்தினம் (ஜூலை 27) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வைத்து தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஹாரி புரூக் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 85 ரன்கள் விளாசினார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் சேர்த்திருந்தது. கவாஜா 26 ரன்களுடனும், லபுசன் 2 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று (ஜூலை 28) ஆஸ்திரேலியா தடுப்பாட்டத்தை கையாண்டது. அதனால் அணிக்கு ரன்கள் மந்தமானது. லபுசன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஸ்மித் நிதானமாக விளையாட, மறுபக்கம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. கவாஜா 7 பவுண்டரிகளுடன் 47 ரன்களிலும், ஹெட் 4 ரன்களிலும், மிட்செல் மார்ஸ் 16 ரன்களிலும், கேரி 10 ரன்களிலும், ஸ்டார்க் 7 ரன்களிலும் வெளியேறினர்.

பொறுமையாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்த ஸ்மித், 123 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 71 ரன்களுக்கு விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேச் கொடுத்து அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து மார்பி மற்றும் கேப்டன் கம்மின்ஸ் சிறிது ரன்கள் சேர்த்து 288 ரன்கள் அணி எடுத்த நிலையில் மார்பி 34 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின் கம்மின்ஸ் 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு வெளியேறினார்.

முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 103.1 ஓவர்களில் 295 ரன்கள் எடுத்து 12 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், பிராட், மார்க் வுட் மற்றும் ஜோ ரூட் தலா 2 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.

இதன் மூலம் ஸ்டூவர்ட் பிராட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 151 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக 150 விக்கெட்கள் எடுத்த 5வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஸ்டூவர்ட் பிராட் பெற்றார். இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறும்.

இதையும் படிங்க:IND Vs WI: முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details