தமிழ்நாடு

tamil nadu

'விக்ரம் வேதா' வரலாற்றில் இடம் பிடிக்கும் - நடிகர் மாதவன்

By

Published : Oct 21, 2021, 5:04 PM IST

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் படம் வரலாற்றில் இடம் பிடிக்கும் என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

madhavan
madhavan

நடிகர்கள் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா'. சசிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து ’விக்ரம் வேதா’ படத்தின் அனைத்து ரீமேக் உரிமைகளும் தயாரிப்பாளர் சஷிகாந்த் பெற்றார். ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், பிளான் சி ஸ்டுடியோஸ் ஆகியோருடன் இணைந்து சசிகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார்.

தமிழில் இயக்கிய புஷ்கர் - காயத்ரி இப்படத்தையும் இயக்கவுள்ளனர். இப்படத்தின் கேங்ஸ்டர் - போலீஸ் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்த விவாதம் நீண்ட நாள்களாக நடைபெற்றது.

இந்நிலையில், விஜய் சேதுபதியாக ஹரித்திக் ரோஷனும், மாதவனாக சைஃப் அலிகானும் நடிக்கின்றனர். விக்ரம் வேதா இந்தி ரீமேக் அக்டோபர் 15ஆம் தேதி அரபு நாடுகளில் தொடங்கியது. இந்தியிலும் விக்ரம் வேதா என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விக்ரம் வேதா படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் மாதவன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தயாரிப்பாளர் சஷிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மாதவன், படத்தின் தயாரிப்புக்காக நீங்கள் செய்திருக்கும் விசயங்களை பார்த்து மலைத்துப் போயிருக்கிறேன்.

ஹரித்திக்கை பார்த்தால் உலகை ஆளுபவர் போலத் தெரிகிறது. என்ன ஒரு உடல் மொழி, தோற்றம். இந்தப் படம் வரலாற்றில் இடம் பிடிக்கும் என்று எழுதப்பட்டு விட்டது என மாதவன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விக்ரம் வேதா இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details