தமிழ்நாடு

tamil nadu

விபத்தில் சிக்கிய யாஷிகாவுக்கு வனிதா கூறிய அறிவுரை!

By

Published : Aug 5, 2021, 11:53 AM IST

Updated : Aug 19, 2021, 8:40 PM IST

சென்னை: கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றுவரும் நடிகை யாஷிகாவிற்கு, "மற்றவர்களின் பேச்சை காதில் வாங்கி கொள்ளாதே" என வனிதா அறிவுரை கூறியுள்ளார்.

யாஷிகா
யாஷிகா

சென்னையில் கார் விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா, தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சமீபத்தில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். விபத்தில் இவரின் தோழி வள்ளி ஷெட்டி உயிரிழந்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் குற்ற உணர்ச்சியோடு பதிவிட்டிருந்தார்.

அதில், "என்னை பெரிய விபத்திலிருந்து காப்பாற்றியற்காக கடவுளிடம் நன்றி சொல்லவா அல்லது என் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியோடு வாழவா... உன் குடும்பம் என்னை விரைவில் மன்னிப்பார்கள் என நம்புகிறேன். உன் ஆன்மா சாந்தியடைய வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார். இவரின் இந்தப் பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துகள் வெளியாகின.

யாஷிகா

இந்நிலையில் இப்பதிவைக் கண்ட நடிகை வனிதா, கருத்து தெரிவித்துள்ளார். அதில், "யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விபத்து நடைபெறும். அதனால்தான் அதை விபத்து என அழைக்கிறோம். நமது பிறப்பு, இறப்பு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது.

முதலில் நீ உன்னை குற்றம் சொல்லிக் கொள்வதை நிறுத்து. உன் மனசாட்சிக்கு நீ உண்மையாக முதலில் இரு. மற்றவர்களின் பேச்சை காதில் வாங்கி கொள்ளாதே. இந்த விபத்திலிருந்து நீ பிழைத்ததற்கு ஒரு காரணம் இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:யாஷிகா கார் விபத்தில் தொடர்பா... ’பிக் பாஸ்’ பாலாஜி விளக்கம்!

Last Updated : Aug 19, 2021, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details