ETV Bharat / sitara

யாஷிகா கார் விபத்தில் தொடர்பா... ’பிக் பாஸ்’ பாலாஜி விளக்கம்!

author img

By

Published : Aug 2, 2021, 9:20 AM IST

2019ஆம் ஆண்டு யாஷிகாவின் கார் விபத்துக்குள்ளானது தொடர்பாக பிக்பாஸ் பாலாஜி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விளக்கமளித்துள்ளார்.

யாஷிகா - பாலாஜி
யாஷிகா - பாலாஜி

நடிகை யாஷிகா சமீபத்தில் சென்னையில் நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் யாஷிகாவின் தோழி உயிரிழந்த நிலையில், தற்போது யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பாகவே யாஷிகா 2019ஆம் ஆண்டு கார் விபத்தை ஏற்படுத்தினார். அதற்கு ’பிக் பாஸ்’ பாலாஜி தான் காரணம் என்றும், குடிபோதையில் கார் இயக்கி அவர் தான் விபத்து ஏற்படுத்தினார் எனவும் அப்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்காமலிருந்த பாலாஜி, தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இது குறித்துப் பேசியுள்ளார்.

"நான் யாஷிகாவுடன் சென்றபோது கார் விபத்து ஏற்படுத்திவிட்டதாக தற்போது வரை கூறுகிறார்கள். அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்காமல் இருந்ததற்கு காரணம், நான் நல்லவன் என்பதை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

யாஷிகா - பாலாஜி
யாஷிகா - பாலாஜி

ஆனால் தொடர்ந்து இச்செய்தி பரவி வருவதால் இதுகுறித்து பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நான் ஓட்டுநர் உரிமம் எடுத்து ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளன. தற்போது வரை நான் ஒரு தடவை கூட குடித்து விட்டு வாகனம் இயக்கியதில்லை. என் பைக்கை 60 முதல் 70 ஸ்பீடு வரை மட்டுமே இயக்கியுள்ளேன்.

வாகனத்தை அதிவேகமாக இயக்குவது சட்டவிரோதம் என்பது எனக்குத் தெரியும். என்னை பின்பற்றுபவர்களுக்கு அது ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதால் அதை நான் செய்யமாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: துல்கர் சல்மானுக்கு ஜோடியான மிருனல் தாக்கூர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.