தமிழ்நாடு

tamil nadu

'கரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது' - மின்சார ரத்துக்கு வைரமுத்து எதிர்ப்பு

By

Published : May 27, 2020, 1:20 PM IST

உழவர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை, அரசு ரத்து செய்ததை அடுத்து, பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு அலைகள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தனது எதிர்ப்பையும் கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

vairamuthu tweet for free power cancellation for farmers
vairamuthu tweet for free power cancellation for farmers

கரோனா ஊரடங்கு நேரத்தில் சாமானிய மக்கள் அன்றாடம் பிழைப்பை நடத்த மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். உணவு கிடைக்காமல் பலர் அனுதினமும் திண்டாடிவருகின்றனர். இந்த நிலையில் உழவர்களுக்கு கிடைக்கும் இலவச மின்சாரத்தை அரசு ரத்து செய்துள்ளது.

பல லட்சம் கோடிகளை நிதியாக வழங்கும் அரசு, மக்களின் வாழ்வாதாரத்துக்கே முக்கியமான ஒன்றான உணவினை வழங்கும் உழவர்களின் வாழ்க்கைக்கு மின்சாரத்தை ரத்து செய்து வேட்டு வைத்துள்ளது. இதை பல அரசியல் கட்சியினரும் எதிர்த்துவருகின்றனர். திரைத்துறையில் இதனை பலமாக எதிர்த்து குரல் கொடுப்பவராக கவிஞர் வைரமுத்து உள்ளார்.

இந்த மின்சார ரத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் வெளியிட்ட கவிஞர் வைரமுத்து, அதில்,

'இந்திய உணவுக் களஞ்சியத்தை

வழிய வழிய

நிரப்பிக் கொடுத்தவர்கள் உழவர்கள்.

அதனால்தான் இன்று இந்தியாவின் வயிறு

இறந்துவிடாமல் இருக்கிறது.

இலவச மின்சாரத்தைத் துண்டித்தால்

கொரோனாவின் எதிர்கால அலைகளை

எதிர்கொள்ள முடியாது.

சிறப்போடு ஆள நினைப்பவர்கள்

பொறுப்போடு சிந்திக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... 'உழவர்களின் அடிமடியில் கை வைத்தால் மின்மாற்றியில் கை வைத்ததாகி விடும்'

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details