ETV Bharat / sitara

'உழவர்களின் அடிமடியில் கை வைத்தால் மின்மாற்றியில் கை வைத்ததாகி விடும்'

author img

By

Published : May 20, 2020, 12:45 AM IST

விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை, அரசு ரத்து செய்ததையடுத்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

vairamuthu tweet on cancellation of free electricity for farmers
vairamuthu tweet on cancellation of free electricity for farmers

நாட்டில் ஊரடங்கில் பெரும் பாதிப்பை விளிம்பு நிலை மக்கள் தினம் தினம் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை விற்க முடியாமலும், விளைச்சல் ஆனப் பொருள்களை அறுவடை செய்ய முடியாமலும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை, அரசு தற்போது ரத்து செய்துள்ளது. இதற்குப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.

பலரும் இந்தச் செயலுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்துவும் தனது எதிர்ப்புக் குரலை ட்விட்டர் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதில், 'உரிமை மின்சாரத்தை நீக்கி, உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம். உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்... அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும்' என வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

  • உரிமை மின்சாரத்தை நீக்கி
    உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம்.
    உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்...
    அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும்.

    — வைரமுத்து (@Vairamuthu) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க... 'அவர்களை சொர்க்கத்தில் சேர்க்க வேண்டாம்; சொந்த ஊரில் சேருங்கள்' - கவிஞர் வைரமுத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.