தமிழ்நாடு

tamil nadu

புலமைப்பித்தன் மறைவு துயரம் தருகிறது- கவிஞர் வைரமுத்து

By

Published : Sep 8, 2021, 1:21 PM IST

புலமைப்பித்தன் -வைரமுத்து

பாடலாசிரியர் புலமைப்பித்தன் மறைவு துயரம் தருகிறது என வைரமுத்து தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், பாடலாசிரியருமானவர் புலமைப்பித்தன் (86). இவர், எம்ஜிஆரின் அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். கடைசியாக வடிவேலுவின் எலி படத்திற்குப் பாடல் எழுதினார்.

உடல்நலக் குறைவு, வயது முதிர்வு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று (செப் 8) காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புலமைப்பித்தன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்க் கலைஉலகில்
புலவர் மரபில் வந்த
பாடலாசிரியர் புலமைப்பித்தன்

திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தவர்

அவருடைய பல பாடல்கள்
மேற்கோள் காட்டத்தக்கவை

தமிழ் தமிழர் என்ற
இரண்டு அக்கறைகள் கொண்டவர்

அவர் மறைவு
துயரம் தருகிறது
குடும்பத்தார்க்கும்
தமிழன்பர்களுக்கும்

என் ஆழ்ந்த இரங்கல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details