தமிழ்நாடு

tamil nadu

'பொன்னியின் செல்வன்' குந்தவை கொடுத்த மாஸ் அப்டேட்!

By

Published : Oct 11, 2021, 11:35 AM IST

மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Ponniyin Selvan
Ponniyin Selvan

கி.பி. 1000ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்றுப் புதினம் 'பொன்னியின் செல்வன்'.

இந்தப் புதினத்தை மையமாக வைத்து தனது நெடுங்கால முயற்சிக்குப் பின் இயக்குநர் மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களை வைத்து 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றன.

டப்பிங் பணி தொடக்கம்

இதன் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம்சிட்டி, ஜெய்ப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெற்றன. இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இதனையடுத்து படக்குழு கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'குந்தவை' கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் த்ரிஷா தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கியுள்ளார்.

'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ’சிவலிங்கத்தை அவமதித்த மணிரத்னம், த்ரிஷா...’ - இந்து அமைப்புகள் புகார்!

ABOUT THE AUTHOR

...view details