தமிழ்நாடு

tamil nadu

'டேலண்ட் இருக்கா? கலந்துக்கங்க...'; ராக்கி படக்குழுவின் அசத்தல் அறிவிப்பு!

By

Published : Dec 12, 2021, 7:31 PM IST

தரமணி வசந்த் ரவி நடிக்கும் ராக்கி திரைப்படத்தின் போஸ்டரை தயாரிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பளித்து படக்குழு அசத்தல் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கூடுதல் விவரங்களை கீழே செய்தியில் காணலாம்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/12-December-2021/13886617_rockyy.jpeg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/12-December-2021/13886617_rockyy.jpeg

'தரமணி' நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் 'ராக்கி' படத்தில் நடித்துவருகின்றனர். இதனை 'சாணிக்காயிதம்' படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இவர் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருதை வென்ற 'ஆரண்ய காண்டம்' படத்தில் உதவி இயக்குநராகவும், 'இறுதிச்சுற்று' படத்தில் டயலாக் போர்ஷனை எழுதியும் பணியாற்றியுள்ளார்.

'ராக்கி' திரைப்படத்தை 'ரெளடி பிக்சர்ஸ்' சார்பாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ராக்கி டேலண்ட் சேலஞ்ச்

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தது. இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாவதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் 'ராக்கி' படக்குழு சார்பாக சேலஞ்ச் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது இத்திரைப்படத்துக்கு சிறந்த போஸ்டரை வடிவமைக்க, யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிறந்த போஸ்டரை தயாரிப்போர் #RockyDesignChallenge எனும் ஹேஸ்டேக்கில், படக்குழுவை டேக் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தேர்ந்தெடுக்கப்படும் போஸ்டரானது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டராக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:‘என் இன்ஸ்பிரேஷன் சூப்பர் ஸ்டார்’ - நடிகர் சிவகார்த்திகேயன்

ABOUT THE AUTHOR

...view details