தமிழ்நாடு

tamil nadu

ஓசூர் செல்லும் 'மாநாடு' படக்குழு

By

Published : Jun 30, 2021, 11:47 AM IST

நடிகர் சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாநாடு
மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் திரைப்படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இதில் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி மட்டும் மீதம் உள்ளது.

அடுத்த வாரம் முதல் இக்காட்சியை ஓசூரில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் 'மாநாடு' படத்தைத் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:14 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் ஹிட்டான ரஜினி பாடல்

ABOUT THE AUTHOR

...view details