தமிழ்நாடு

tamil nadu

சிம்புவால் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படப்பிடிப்புக்கு சிக்கல்!

By

Published : Aug 4, 2021, 7:37 PM IST

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்திற்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

simbu
simbu

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'மாநாடு' திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து சிம்பு, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு தயாராகி வருகிறது. தற்போது இப்படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

AAA-வால் சிம்புவுக்கு வந்த சோதனை

சிம்பு நடிப்பில் வெளியான 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு சிம்பு ரூ. 20 கோடி தரவேண்டும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசித்தீர்க்க சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், இதுதொடர்பாக இன்னும் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. எனவே, 'நதிகளிலே நீராடும் சூரியன்' படப்பிடிப்பு தொடங்குவதற்குமுன், மைக்கேல் ராயப்பன் தரப்பு தயாரிப்பாளர் சங்கத்தை மீண்டும் நாடியுள்ளது.

தனக்கு தரவேண்டிய பணத்தைத் தராமல் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்றும்; அவரது தரப்பு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடங்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதையும் படிங்க: சிம்பு - கெளதம் மேனன் பட அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details