ETV Bharat / sitara

சிம்பு - கெளதம் மேனன் பட அப்டேட்

author img

By

Published : Jul 21, 2021, 6:12 PM IST

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சிம்பு - கெளதம் மேனன்
சிம்பு - கெளதம் மேனன்

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த சூப்பர் ஹிட் கூட்டணி இணைந்துள்ளது.

'நதிகளிலே நீராடும் சூரியன்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் போட்டோ ஷூட் இன்று (ஜூலை 21) சென்னையில் நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகவுள்ளது. மேலும் விரைவாகப் படப்பிடிப்பு நடத்தி டிசம்பர் மாதம் படத்தை வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நதிகளிலே நீராடும் சூரியன்
நதிகளிலே நீராடும் சூரியன்

இது குறித்து சிம்பு நடித்துள்ள, 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "இனி, தம்பி சிம்புவின் ஒவ்வொரு நாளும் புதிய நாளே. இன்று நதிகளிலே நீராடும் சூரியன் போட்டோ ஷூட்டுடன் ஆரம்பமாகிறது. வாழ்த்துகள் கெளதம் மேனன், ஐசரி கணேசன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.