தமிழ்நாடு

tamil nadu

சமூக வலைதளப்பக்கத்தில் மாஸ் காட்டி கெத்தாக நிற்கும் ராஷ்மிகா!

By

Published : Oct 18, 2021, 4:48 PM IST

Rashmika
Rashmika

சமூக வலைதளப்பக்கத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளதையடுத்து மிகவும் செல்வாக்கு மிக்க நடிகர்களின் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடத்தில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

'ஃபோர்ப்ஸ் இந்தியா' இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலான டாப் 100 பணக்காரர்களின் பட்டியல், உலக அளவிலான பணக்காரர்களின் பட்டியல், செல்வாக்கு மிக்க பிரபலங்கள் உள்ளிட்ட பலரின் விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகை தென்னிந்திய சினிமாவில் சமூக வலைதளப்பக்கத்தில் அதிக பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கொண்டுள்ள பிரபலங்களின் டாப் 30 பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த டாப் 10 பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனா 10-க்கு 9.88 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்குப்பின் விஜய் தேவரகொண்டா இரண்டாவது இடத்திலும் யாஷ் மூன்றாவது இடத்திலும் சமந்தா நான்காவது இடத்திலும் அல்லு அர்ஜூன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

டாப் 10 பட்டியல்

  1. ராஷ்மிகா மந்தனா
  2. விஜய் தேவரகொண்டா
  3. யாஷ்
  4. சமந்தா
  5. அல்லு அர்ஜூன்
  6. துல்கர் சல்மான்
  7. பூஜா ஹெக்டே
  8. பிரபாஸ்
  9. சூர்யா
  10. தமன்னா

இந்தப் பட்டியலில் தனுஷ் 13ஆவது இடத்திலும் விஜய்சேதுபதி 29ஆவது இடத்திலும் உள்ளார்.

சமூக வலைதளப்பக்கங்களில் பிரபலங்கள் பதிவிடும் பதிவுக்களுக்கு கிடைக்கும் லைக், கமெண்ட், வீடியோக்களின் பார்வை, பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆறு பெண்கள்

ABOUT THE AUTHOR

...view details