தமிழ்நாடு

tamil nadu

அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு

By

Published : Oct 1, 2021, 6:37 PM IST

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதியைப் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Annaatthe
Annaatthe

'தர்பார்' படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'அண்ணாத்த'. சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நடந்துமுடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விவேகா எழுதிய பாட்டிற்கு மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் #AnnaattheFirstSingle என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

இதையும் படிங்க: அண்ணாத்த டப்பிங்கை முடித்த ரஜினி!

ABOUT THE AUTHOR

...view details