தமிழ்நாடு

tamil nadu

பிறந்தநாளை முன்னிட்டு லேடி சூப்பர் ஸ்டாரின் ’நெற்றிக்கண்’ டீசர்

By

Published : Nov 17, 2020, 11:00 PM IST

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள் நாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள ’நெற்றிக்கண்’ படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.

Netrikan teaser is going to be released tomorrow
Netrikan teaser is going to be released tomorrow

’லேடி சூப்பர் ஸ்டார்’ எனக் கோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா, நாளை (நவ.17) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் நாளை காலை 9.09 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாரா முதன்முறையாக கண்பார்வை அற்றவராக நடித்துள்ள நிலையில், அவரது ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் 23ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், நாளை இப்படத்தின் டீசர் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

டீசர் அறிவிப்பு

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளிவர உள்ள முதல் திரைப்படம் இதுவாகும். கரோனா ஊரடங்கின் மத்தியில், பெரும்பாலான நகரங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

இதனிடையே தீபாவளியை முன்னிட்டு, நயன்தாரா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:படப்பிடிப்பிற்காக மெட்ரோவில் பயணம் செய்த ஆர்யா

ABOUT THE AUTHOR

...view details