தமிழ்நாடு

tamil nadu

ப்ளூ சட்டை மாறன் இயக்கிய படத்திற்கு தடை!

By

Published : Apr 7, 2021, 9:56 PM IST

Updated : Apr 7, 2021, 10:26 PM IST

பிரபல யூ-டியூப் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள படத்திற்கு தணிக்கை குழுவினர் தடை விதித்துள்ளனர்.

புளூ சட்டை மாறன்
புளூ சட்டை மாறன்

யூ-டியூப் தளத்தில் தமிழ் டாக்கீஸ் சேனல் மூலம் திரைப்படங்களுக்கு விமர்சனம் சொல்லி பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து தற்போதைய அரசியல் களத்தை நையாண்டி செய்து எடுத்துள்ள இப்படத்திற்கு Anti Indian (ஆண்ட்டி இண்டியன்) என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு தடை விதித்தனர். ஆனால் எதற்காக படத்திற்கு தடை விதிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகவில்லை. இதனால் திரையுலகினர் மத்தியில் ஒருவித சலசலப்பு ஏற்பட்டது.
எல்லோருடைய படங்களையும் கிழித்து தொங்கவிட்ட இவரது படத்திற்கே இந்த நிலைமையா என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் தயாரிப்பாளர் தரப்பில் இதுகுறித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Last Updated : Apr 7, 2021, 10:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details