'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', புறம்போக்கு எனும் பொதுவுடைமை உள்ளிட்ட நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை 'புறம்போக்கு' படத்தில் இயக்கியுள்ளார். இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து 'லாபம்' எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
சுட்டவர்களும் குடிமக்கள்தான்; சுடப்பட்டவர்களும் குடிமக்கள்தான் - எஸ்.பி ஜனநாதன்
உணவு அரசியலும் கலகல கமர்சியலும் சேர்ந்ததுதான் 'லாபம்' என படத்தின் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் கூறியுள்ளார்.
இந்தப் படத்தை 7சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஆறுமுககுமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவில், டி.இமான் இசையில் படம் உருவாகிவருகிறது. இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ளனர். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு அரசியல் பேசும் கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படம் குறித்து ஜனநாதன் கூறுகையில், உணவு அரசியலும் கலகல கமர்சியலும் சேர்ந்ததுதான் லாபம் திரைப்படம். இப்படத்தில் விவசாய அரசியல் குறித்து புரட்சிகரமான விஷயங்களும் பேசப்பட்டுள்ளது. இங்கு சுட்டவர்களும் குடிமக்கள்தான், சுடப்பட்டவர்களும் குடிமக்கள்தான் என்றார்.