தமிழ்நாடு

tamil nadu

'கைதி' படத்தை ரீமேக் செய்ய தடை

By

Published : Jul 3, 2021, 9:29 PM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம், பிற மொழிகளில் ரீமேக் செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kaithi
kaithi

தமிழ் சினிமாவில் 2019ஆம் ஆண்டு தீபாவளி ரேஸில் விஜய்யின் 'பிகில்' படத்துடன் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படம் 'கைதி'. கார்த்தி நடித்திருந்த இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது.

கைதி ரூ.100 கோடிக்கு மேல் வசூல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைத்துறையினரும் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தனர். படம் பார்த்த அனைவருக்கும் 'கைதி' டில்லியைப் பிடித்துப் போய்விட்டது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியான இப்படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது.

கைதி இந்தி ரீமேக்

இப்படத்தை "ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்" தயாரித்திருந்தது. இந்தியில் ரிலையன்ஸ் என்ட்டெர்டெயின்மென்ட்டும், டிரீம் வாரியர்ஸூம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார். மேலும் கைதி இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் எனவும் படக்குழுவினர் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தனர்.

கைதி கதை என்னுடையது

இந்நிலையில், கைதி 2ஆம் பாகத்திற்கும் ரீமேக் செய்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கேரளாவை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், 2000ஆம் ஆண்டு சென்னை புழல் சிறைச்சாலையில், தனக்கு நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கதை ஒன்றை தயாரிக்கினேன். இந்த கதையை 2007ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபுவை சந்தித்து கூறினேன். எனது கதை அவருக்கு பிடித்துப்போகவே ரூ. 10 ஆயிரம் முன்பணமாக எனக்கு வழங்கினார்.

எஸ்.ஆர். பிரபு நஷ்ட ஈடு வழங்கவேண்டும்

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், லோகஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். படத்தை பார்த்து நான் அதிர்ச்சியுற்றேன். காரணம் நான் சொன்ன கதையின் இரண்டாம் பகுதியை வைத்து கைதி படத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் எனக்கு நஷ்ட ஈடாக ரூ. 4 கோடியை கைதி படத்தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு வழங்கவேண்டும் என குறிப்பிட்டார்.

கைதி ரீமேக் எடுக்க தடை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு கைதி படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யவும், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'அண்ணனைத் தொடர்ந்து தம்பி...' - சிங்கத்தைத் தொடர்ந்து 'கைதி' ரீமேக்கில் அஜய் தேவ்கன்

ABOUT THE AUTHOR

...view details