தமிழ்நாடு

tamil nadu

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் பெயரில் பணமோசடி - சைபர் கிரைமிடம் புகார்

By

Published : Aug 26, 2021, 4:50 PM IST

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பெயரில் பணமோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

f
f

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் 'பசங்க 2' , '36 வயதினிலே' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது. இந்த நிலையில் 2டி என்டெர்டைன்மென்ட் நிறுவனம் ஆன்லைன் மூலமாக சென்னை சைபர் கிரைம் காவல் துறையினரிடம் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அந்தப் புகாரில், 2டி நிறுவனம் பெயரில் போலியான மெயில் ஐடி மூலம், நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களை குறிவைத்து மோசடி நடைபெறுகிறது. நடிக்க விரும்புபவர்களின் மெயில் ஐடிக்கு 2டி நிறுவனம் புதிதாக தயாரிக்க உள்ள படத்தில் சிவகார்த்திகேயன், அபர்ணா முரளி ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக அழைப்பு விடுக்கின்றனர்.

தற்போது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் 'ஜெய்பீம்', 'உடன்பிறப்பே' உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டு வருவதால் பொது மக்களும் நம்பி வாய்ப்பு கேட்டு விண்ணப்பிக்கின்றனர். மேலும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்தி மெயில் அனுப்பபடுவதால் பொதுமக்கள் முழுவதுமாக நம்பியுள்ளனர்.

இந்த அறிவிப்பை நம்பி தொடர்பு கொள்பவர்களிடம், ரூ.3 ஆயிரத்து 500 பணம் பெற்றுக்கொண்டு விரைவில் அழைப்பதாக கூறி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணத்தின் மூலம் நடிகர் சங்க அடையாள அட்டை வாங்கி தர உள்ளதாக கூறி பணம் பறிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

போலி இமெயில் உருவாக்கி பண மோசடியில் ஈடுபடும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் 2டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக 2D என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: வருமான வரிக்கு வட்டி செலுத்த விலக்குகோரிய விவகாரம்: நடிகர் சூர்யா வழக்கு தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details