தமிழ்நாடு

tamil nadu

'அது ஜாய் புல்... இது ஜெயில் புல்...' - சமையல் அறையில் இருந்த படத்தை வெளியிட்ட மெகா ஸ்டார்!

By

Published : May 18, 2020, 8:18 PM IST

நடிகர் சிரஞ்சீவி தனது வீட்டின் சமையலறையில் இருந்து சமைக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளிட்டுள்ளார்.

chiranjeevi
chiranjeevi

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது கொரட்லா சிவா இயக்கும் 'ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 152ஆவது படமாகும். இப்படத்தை அவரது மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்படும் சிரஞ்சீவி தினம்தோறும் ரசிகர்களுடன் உரையாடியும், தனது பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார்.

சமீபத்தில், ஒடிசாவில் வேலை பார்க்கும் பெண் காவலர் சுபஸ்ரீ அன்னையர் தினத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு உணவை ஊட்டிவிடும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலானது. இதனைப் பார்த்த சிரஞ்சீவி அவரை காணொலி கான்ஃபெரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு, தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்திருந்தார்.

அதேபோல் சிரஞ்சீவி 80ஸ் ரீ யூனியன் பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் நடிகைகள் சுஹாசினி, ஜெயசுதா, குஷ்பூ, ஜெயப்பிரதா, ராதா ஆகியோருடன் சிரஞ்சீவி நடனமாடுகிறார். அதை பிரபு, சுரேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் பார்த்து ரசிக்கின்றனர். அந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத்தொடர்ந்து தற்போது 1990இல் அமெரிக்காவில் தனது விடுமுறையை கொண்டாடிய புகைப்படத்தை, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அமெரிக்காவில் உள்ள வீட்டின் சமையல் அறையில் சிரஞ்சீவி சமைக்க அவருக்கு பின்னால் அவரது மனைவி நிற்கிறார். இந்தப் புகைப்படத்தை தற்போது அவரது இல்லத்தில் உள்ள சமையல் அறையில் சிரஞ்சீவி சமைக்க, அவர் பின்னால் அவரது மனைவி நிற்பது போன்ற கோணத்தில் எடுத்து ஒப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த இரு படங்களையும் இணைத்த சிரஞ்சீவி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு கேப்சனாக "JoyFul Holiday in America 1990 & 'Jail' ful Holiday in Corona 2020" என நகைச்சுவையாக வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருக்கு மெகா ஸ்டாரின் சேலஞ்ச்

ABOUT THE AUTHOR

...view details