தமிழ்நாடு

tamil nadu

ஷுட்டிங்கை முடித்த ப்ளூ சட்டை மாறன்

By

Published : Dec 25, 2019, 9:19 PM IST

Updated : Dec 25, 2019, 10:27 PM IST

மூன்று மாதங்களாக படப்பிடிப்பு நடத்தி வந்த ப்ளூ சட்டை மாறன் 100 நாட்களில் தனது படத்தின் ஷுட்டிங்கை முடித்துள்ளார்.

Blue sattai maran movie
Blue sattai maran wrapped his movie

சென்னை: திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்து புகழ் பெற்ற ப்ளூ சட்டை மாறன், இயக்குநராக களமிறங்கி தனது படத்தின் ஷுட்டிங்கை 100 நாட்களில் முடித்துள்ளார்.

ஒவ்வொரு வாரமும் வெளியாகும் திரைப்படங்களை தனது யூடியூப் சேனல் மூலம் விமர்சனம் செய்து புகழ் பெற்றவர் ப்ளூ சட்டை மாறன். எந்தப் படமானாலும், வேறு ஏதாவது ஒரு படத்துடன் ஃரெபரன்ஸ் கொடுத்து விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர், பெரும்பாலான படங்களை எதிர்மறை கருத்தை சொல்லி பலரிடம் வாங்கிக்கட்டிக்கொள்வார்.

சிறப்பான படம் என்று இவர் கூறிய படங்கள் குறுகிய எண்ணிக்கையில் இருக்கின்றன. இவரது விமர்சனத்துக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில், திரைப்படங்களை விமர்சிப்பது தொடர்பாக இவரை பாராட்டுவோர், திட்டித் தீர்ப்போர் என சம அளவில் இருக்கின்றனர்.

திரைப்பிரபலங்கள், தயாரிப்பாளர், ரசிகர்கள் பலரும் இவரது எதிர்மறையான விமர்சனங்களை கண்டு, இவர் ஒரு படம் எடுத்துவிட்டு பின்னர் விமர்சனம் செய்யட்டும் என சவால் விடுத்த நிலையில், அதனை ஏற்று படம் இயக்க களமிறங்கினார் ப்ளூ சட்டை மாறன்.

இதையடுத்து இவருக்கு வி ஹவுஸ் புரொடக்‌ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆதரவு தர, கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி தனது படத்தின் ஷுட்டிங்கை தொடங்கினார்.

Blue sattai maran movie

தொடர்ந்து மூன்று மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்றுவந்த நிலையில், டிசம்பர் 21ஆம் தேதி படத்தின் ஷுட்டிங்கை முடித்துள்ளார்.

Blue sattai maran movie shooting

சரியாக 100 நாட்களில் படத்தை எடுத்து முடித்துள்ள அவர் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கியுள்ளார். விரைவில் படம் குறித்த அடுத்த அப்டேட்டை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

Blue sattai maran movie shooting

படத்துக்கு தலைப்பு ஏதும் வைக்கப்படாத நிலையில், படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Dec 25, 2019, 10:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details