தமிழ்நாடு

tamil nadu

அரபிக் குத்து அதிர்வலையில் ட்ரெண்டாகும் அஜித்தின் வைரல் புகைப்படம்!

By

Published : Feb 15, 2022, 11:35 AM IST

நடிகர் அஜித் குமாரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

ajith recent pic gone viral in social media
அஜித்தின் வைரல் புகைப்படம்

கரோனா ஊரடங்கு, திரையரங்குகளில் 50 விழுக்காடு மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்ததால் பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அந்தத் திரைப்படங்களில் பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதில் வலிமை திரைப்படமும் ஒன்று.

இதனையடுத்து, கரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில், திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது. இதனால், பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று ட்விட்டரில் வெளயாகியுள்ளது. இதனால் குஷியான அஜித் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம்

நேற்றைய தினம் (பிப். 14) விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் (Beast) திரைப்படத்திலிருந்து ”அரபிக் குத்து” (Arabic Kuththu) பாடல் வெளியாகி வைரலான நிலையில், இன்று அஜித்தின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘அரபிக் குத்து’ லிரிக்கல் வீடியோ - உற்சாகத்தில் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details