தமிழ்நாடு

tamil nadu

லெஜண்ட் சரவணனுடன் நடித்த நடிகைக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்

By

Published : Oct 1, 2021, 7:10 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தின் கெளரவத்துக்குரிய கோல்டன் விசாவை, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா பெற்றுள்ளார்.

Urvashi Rautela
Urvashi Rautela

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு, தன் நாட்டில் சிறந்த முதலீட்டாளர்கள், பிசினஸ்மேன்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய கெளரவ விசாவான கோல்டன் விசாவை வழங்குகிறது.

இந்த கோல்டன் விசா 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவைப் பெற்றவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கெளரவமாக நடத்தப்படுவார்கள்.

தங்கள் நாட்டில் தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்கவும்; அவ்வாறு முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தவும் அமீரக அரசு இத்தகைய நடைமுறையை மேற்கொண்டு வருகிறது.

முதலில் தொழில்துறையைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கோல்டன் விசா, தற்போது பொழுதுபோக்கு உள்பட மேலும் சில துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கி அமீரக அரசு கெளரவித்து வருகிறது.

அதன்படி மலையாள நடிகர்கள், மம்மூட்டி, மோகன்லால், டொவினோ தாமஸ், பிரித்விராஜ் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் சஞ்சய் தத், ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்களுக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்முறையாக இந்திய நடிகையான ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது. இதுகுறித்து ஊர்வசி ரவுத்தேலா தனது சமூக வலைதளப்பக்கத்தில், "பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் கோல்டன் விசாவை 12 மணிநேரத்துக்குள் பெற்ற முதல் இந்திய நடிகை நான் என்பதில் பெருமை.

இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் கிடைத்திருக்கும் மிகப்பெரிய மரியாதை. இதை வழங்கிய ஐக்கிய அமீரக அரசுக்கு, எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஊர்வசி ரவுத்தேலா தற்போது லெஜண்ட் சரவணன் நடித்து வரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் அவர் நடிக்கும் முதல் தமிழ் படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லதா ரஜினிகாந்த் வாழ்த்து: மகிழ்ச்சியில் ஊர்வசி ரவுத்தேலா

ABOUT THE AUTHOR

...view details