தமிழ்நாடு

tamil nadu

சூப்பர் ஸ்டாரின் ஏரியாவில் குடியேறும் லேடி சூப்பர்ஸ்டார்!

By

Published : Nov 26, 2021, 6:58 PM IST

சென்னை போயஸ் கார்டனில் நடிகை நயன்தாரா புதிய வீடுகளை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara
Nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. பிஸியாக நடித்து வரும் நயன்தாரா விரைவில் தனது காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ளபோவதாக கூறப்படுகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள வீட்டில் நயன்தாரா குடியிருந்து வருகிறார். இவர் திருமணத்திற்கு பின் தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக, எழும்பூர் வீட்டை விட சிறப்பான வீடு வாங்க திட்டமிட்டு இருந்தார்.

அப்போது ரஜினி காந்த், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோரின் வீடுகள் இருக்கும் போயஸ் கார்டன் பகுதியில் புதிதாக அப்பார்ட்மெண்ட் ஒன்று உருவாகி வருவது நயன்தாராவுக்கு தெரியவந்தது.

அங்கு இரண்டு குடியிருப்புகளை அவர் புக் செய்துள்ளார். தற்போது அங்கு கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்பதால், நயன்தாரா தன் கைவசம் இருக்கும் படங்களை முடித்து விட்டு திருமணத்திற்கு பின் விக்னேஷ் சிவனுடன் அங்கு குடியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் போயஸ் கார்டனில் வசித்து வரும் நிலையில், ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்டும் நயன்தாராவும் அங்கு குடியேற திட்டமிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நடிகர் தனுஷ் ’தி க்ரே மேன்' என்னும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு முன் ரஜினியின் வீட்டின் அருகே புதிய வீடு கட்டுவதற்காக பூஜை போட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை கணித்த ஜோதிடர்

ABOUT THE AUTHOR

...view details