தமிழ்நாடு

tamil nadu

அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியான 'தேள்' ட்ரெய்லர்!

By

Published : Nov 18, 2021, 6:29 PM IST

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள 'தேள்' படத்தின் ட்ரெய்லர் இன்று (நவ.18) வெளியாகியுள்ளது.

theal
theal

தமிழில் 'தூத்துக்குடி', 'திருத்தம்', 'மதுரை சம்பவம்' உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் ஹரிகுமார். இவர் தற்போது ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் 'தேள்' படத்தை இயக்கியுள்ளார்.

'தேள்' படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். அவருடன் நடிகைகள் சம்யுக்தா, ஈஸ்வரி ராவ், நடிகர் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தேள் படத்தில் பிரபுதேவாவும் ஈஸ்வரி ராவும் அம்மா - மகனாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பிரபுதேவா முதல்முறையாக நடனமாடாமல் இடது கை பழக்கமுள்ளவராகவும் நடித்துள்ளார்.

இன்று (நவ.18) இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் பிரபுதேவா ரவுடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாது அதிரடி ஆக்சன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இப்படம் திரையரங்கில் டிசம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தேள்' எனக்கு வித்தியாசமான அனுபவம் - நடிகர் பிரபுதேவா

ABOUT THE AUTHOR

...view details