தமிழ்நாடு

tamil nadu

Huawei Mate X: அதிரடி காட்டும் ஹுவாவே மேட் எக்ஸ்

By

Published : Mar 21, 2019, 2:02 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

பிப்ரவரி 24ஆம் தேதி, ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வெளியானது ஹுவாவே நிறுவனத்தின் மடித்திறன்பேசி (Smart Phone) மேட் எக்ஸ். மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) மாநாட்டில் வெளியான அனைத்து கைபேசிகளை விட ஹுவாவே மேட் எக்ஸ் அதிகம் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.

ஹுவாவே மேட் எக்ஸ் திறன்பேசி இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்த திறன்பேசி இந்தியாவில் வெளியாகலாம் என்று இதன் அலுவலர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதன் விலை எவ்வளவாக இருக்கும் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

ஹூவாய் மேட் எக்ஸ் தோற்றம்


ஹுவாவே மேட் எக்ஸ் சிறப்பம்சங்கள்:
  • 8" அகண்ட மடக்குத் திரை
  • கிரின் 980 (Kirin 980), பாலாங் 5000 (Balong 5000) சிப்செட் இந்த திறன்பேசியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை (5ஜி) உதவி இருப்பதால் நிச்சயம் ஒரு ஜிபி படத்தினை கூட வெறும் மூன்று நொடிகளில் பதிவிறக்கம் செய்துவிடலாம்.
  • லெய்கா (Leica) படக்கருவி நிறுவனத்துடன் இணைந்து இதன் துல்லிய புகைப்படக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
  • அதிவிரைவு மின்னூக்கி (Fast Charging)
  • பக்கவாட்டில் அமைந்திருக்கும் அதிவேக கைரேகை பொத்தான்
  • 4500 எம்.ஏ.ஹெச். மின்கலன் (Battery) பொருத்தப்பட்டுள்ளது
    ஹூவாய் மேட் எக்ஸ் புகைபடக் கருவி
    ஹூவாய் மேட் எக்ஸ்


ஐரோப்பாவில் இவ்வருடத்தின் மத்தியில் வெளியாக உள்ளது இந்த திறன்பேசி. இதன் விலை 2,299 யூரோக்களாகும்.

ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் திறன்பேசியின் விலையை விட இதன் விலை மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
Last Updated :Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details