தமிழ்நாடு

tamil nadu

ஐஃபோன் 14 சீரிஸ் செல்போன்கள் உற்பத்தியில் கார்பன் உமிழ்வு குறைப்பு... ஆப்பிள் நிறுவனம் தகவல்...

By

Published : Sep 12, 2022, 2:12 PM IST

Apple

ஆப்பிள் ஐஃபோன் 14 சீரிஸ் செல்போன்கள், மறுசுழற்சி செய்யக்கூடிய உலோகங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதால், எந்தவித காலநிலை தாக்கத்தையும் ஏற்படுத்தாது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி: அண்மையில் ஆப்பிள் ஐஃபோன் 14 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஐஃபோன்களை வாங்குதற்கான முன்பதிவு இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ஐஃபோன் 14, ஐஃபோன் 14 ப்ரோ, ஐஃபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் தற்போது விற்பனையில் உள்ளன. இந்த ஐஃபோன்கள் 80,000 ரூபாய் தொடங்கி சுமார் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஆப்பிள் ஐஃபோன் 14 சீரிஸ் செல்போன்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, மறுசுழற்சி செய்யக்கூடிய உலோகங்கள், கனிமங்களை பயன்படுத்தி இந்த ஐஃபோன்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரின்டட் சர்க்யூட் போர்டுகள் (PCB), கேமராக்களின் கம்பிகள் நூறு சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியவை என்றும், வெளிப்புற பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள் ஃபைபராக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐஃபோன் உற்பத்தியில் கார்பன் உமிழ்வின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் ஐஃபோன் உற்பத்தியில் கார்பன் உமிழ்வை முழுவதுமாக கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஃபோன் 14 சீரிசின் உற்பத்தி, அசெம்பிளி, சார்ஜிங் உள்ளிட்ட ஒட்டுமொத்த செயல்முறைகளும், எந்தவித காலநிலை தாக்கத்தையும் ஏற்படுத்தாது என என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:எலோன் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’-க்கு போட்டியாக விளங்கும் ஐபோன் 14 சீரிஸ்

ABOUT THE AUTHOR

...view details