தமிழ்நாடு

tamil nadu

சென்னை பல்கலைக்கழகத்தில் புதிய BBsc பட்டப்படிப்பு அறிமுகம்

By

Published : Apr 9, 2022, 4:02 PM IST

புதிய B.sc பட்டப்படிப்பு நேற்று சென்னை பல்கலைக்கழகம் அறிமுகம்

சென்னை பல்கலைக்கழகத்தில் BBsc எனப்படும் இந்தப் பட்டப்படிப்பு அறிவியல் பாடப் பிரிவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னை:ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை பல்கலைக்கழகம் வரும் கல்வியாண்டு முதல் ஒன்றிணைந்த பிஎஸ்சி படிப்பினை அறிமுகப்படுத்த உள்ளது.

BBSC எனப்படும் இந்த பட்டப்படிப்பு அறிவியல் பாடப் பிரிவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி இயற்பியல் வேதியியல் கணிதம் மற்றும் உயிர் அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்க விரும்பும் மாணவர்கள் ஒன்றிணைந்த புதிய பிஎஸ்சி பட்டப் படிப்பினை தேர்வு செய்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதன்படி முதல் நான்கு செமஸ்டர்கள் மாணவர்கள் கணிதம் இயற்பியல் வேதியியல் உயிரியல் ஆகிய பாடங்கள் செய்முறை வகுப்புகளுடன் கற்றுத்தரப்படும். இறுதியாண்டில் உள்ள மீதமிருக்கும் இரண்டு செமஸ்டர் களில் மாணவர்கள் தாங்கள் விரும்பும். ஏதேனும் ஒரு முதன்மை பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.

மெல்போர்ன் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்பிற்கு இணையானதாக சென்னை பல்கலைக்கழகத்தால் கற்பிக்கப்படும். இந்த புதிய பாடப்பிரிவு கருதப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய பட்டப்படிப்பினை மெல்பர்ன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் இணைந்து கண்காணிப்பார்கள் என்றும் சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு மெல்போர்ன் பல்கலைக்கழகத்திற்கும் இடையே இந்தப் புதிய பாடப்பிரிவு தொடங்குவது தொடர்பாக வரும் 11ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் சிறந்த கல்வி நிலையங்களின் பட்டியலில் மெல்போர்ன் பல்கலைக்கழகம் 33ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:படிப்பை முடித்த 180 நாள்களில் பட்டம்- யுஜிசி அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details