தமிழ்நாடு

tamil nadu

சிவப்பு இறைச்சியில் இவ்வளவு ஆபத்தா?

By

Published : Mar 29, 2019, 2:11 PM IST

வாஷிங்டன்: சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தினமும் அதிகளவில் சாப்பிடுவோருக்கு இருதய வாழ்வு சம்பந்தமான நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட்டு அதிகம் இறக்கின்றனர் என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

சிவப்பு இறைச்சி

அமெரிக்க ஊட்டச்சத்து நிபுணரான மாஸ்டர் அல்ஷஹரானி, சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவது ஆரோக்கியமானதா என்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவை நியூட்ரியன்ஸ் என்ற இதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் குறைந்த விலையில் கிடைக்கும் சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் சாப்பிடும் 90 விழுக்காட்டினருக்கு ரத்தக் குழாய் சம்பந்தமான நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவது தெரியவந்துள்ளது. மேலும் இதனால் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 7900 பேர் தினமும் சிவப்பு இறைச்சி சாப்பிட்டதால் இறந்ததாக தேசிய இறப்பு குறியீடு அமைப்பு புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் 2,600 பேர் இருதயக்குழாய் நோயினாலும், 1,800 பேர் புற்றுநோயாலும் இறந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் சைவ உணவுகளை உண்பதால் ஏற்படும் இறப்பை விட, இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் இறப்பு அதிகம் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details