தமிழ்நாடு

tamil nadu

Latest Tech News:" அடங்கப்பா...வேகம்"- நான்கு நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த 64,000 மொபைல்கள்!

By

Published : Sep 16, 2019, 11:31 PM IST

Realme XT மொபைல்போன் விற்பனைக்கு வந்த வெறும் நான்கு நிமிடங்களில் 64ஆயிரம் மொபைல்கள் விற்றுத் தீர்ந்துள்ளது.

Realme XT

#RealmeXT sale update: மொபைல்ஃபோன் சந்தையில் நுழைந்து வெறும் ஒரே வருடத்தில், இந்திய மொபைல்ஃபோன் சந்தையில் ஒன்பது சதவிகிதத்தைக் கைப்பற்றியுள்ளது ரியல்மி. மாதத்திற்கு இரு மொபைல் என புயல் வேகத்தில் புது மொபைல்களை அறிமுகப்படுத்திவரும் ரியல்மியின் லேட்டஸ்ட் வரவு Realme XT.

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த நிகழ்வில் Realme XT அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் முதல் 64 மெகாபிக்சல் கேமாராவைக்கொண்ட இந்த மொபைல்ஃபோன், அறிமுகப்படுத்தப்பட்ட 64 மணி நேரத்தில் 64 ஆயிரம் மொபைல்ஃபோன்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று மதியம் சரியாக 12 மணிக்கு இந்த மொபைல்ஃபோன் ஃப்ளிப்கார்ட் தளத்திலும், ரியல்மி தளத்திலும் விற்பனைக்கு வந்தது. வெறும் நான்கே நிமிடங்களில் இந்த 64,000 மொபைல்களும் விற்றுத்தீர்ந்துவிட்டதாக ரியல்மி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ரியல்மி XT முழுத்தகவல் படிக்க: ரியல்மியின் புதுவரவாக வந்துள்ள ரியல்மி XT- முழுத்தகவல்கள்

Intro:Body:Conclusion:

ABOUT THE AUTHOR

...view details