தமிழ்நாடு

tamil nadu

Realme X50 Pro 5G: ரியல்மி X50 புரோ 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

By

Published : Apr 24, 2020, 9:37 AM IST

Updated : Apr 24, 2020, 9:59 AM IST

இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ரியல்மி X50 புரோ 5G ஸ்மார்ட்போன் அதன் உலகளாவிய அறிமுகத்தை சந்தித்தது. ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரியல்மியிடமிருந்து வெளியாகியுள்ள முதல் 5ஜி ஸ்மார்ட்போன் தான், இந்தியாவில் வெளியாகும் முதல் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை!

ரியல்மி X50 ப்ரோ 5G (முன்பக்கம்)
ரியல்மி X50 ப்ரோ 5G (முன்பக்கம்)

இந்தியாவில் ஒப்போ நிறுவனம் தனது பணியாளர்களுக்குப் புதியவகை 5ஜி அலைக்கற்றை வசதியுள்ள ரகங்களை அறிமுகம் செய்துள்ளது.

பிரதான அம்சங்கள்:

  • க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC பிராசஸர்,
  • 65W சூப்பர் டார்ட் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம்,
  • இன்-டிஸ்ப்ளே கைரேகை உணர்வி (சென்சார்), டூயல் செல்ஃபி கேமராக்கள்
    ரியல்மி X50 புரோ 5G (முன்பக்கம்)

பிப்ரவரி 25 செவ்வாய்க்கிழமையன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐக்யூ 3 ஸ்மார்ட்போனுடன் கடுமையாகப் போட்டியிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். புதிய ரியல்மி எக்ஸ்50 புரோவின் இந்திய விலை நிர்ணயம் என்ன? அம்சங்கள் என்ன? என்னென்ன வண்ண விருப்பங்களின்கீழ் வாங்க கிடைக்கிறது? போன்ற விவரங்களைத் தொடர்ந்து அறியலாம்.

இந்தியாவில் ரியல்மி எக்ஸ்50 புரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.37,999-க்கும், இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.39.999-க்கும், இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.44.999-க்கும் அறிமுகம் ஆகியுள்ளது.

இந்த மூன்று விருப்பங்களுமே இந்தியாவில் இன்று மாலை 6 மணி முதல் மாஸ் கிரீன், ரஸ்ட் ரெட் ஆகிய வண்ண விருப்பங்களின்கீழ் விற்பனைக்கு வருகிறது. மேலும், இந்த விற்பனை பிளிப்கார்ட், ரியல்மே.காம் வழியாக நடைபெறும்.

டிஸ்பிளே, பிராசஸர் / மெமரி

  1. டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட ரியல்மி எக்ஸ் 50 புரோ 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யுஐ கொண்டு இயங்குகிறது.
    ரியல்மி X50 புரோ 5G (பின்பக்கம்)
  2. இந்த ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் அளவிலான ஃபுல்-ஹெச்டி + (1080x2400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  3. இது ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC பிராசஸர் உடனாக அட்ரினோ 650 ஜி.பீ.யு., 12 ஜிபி வரையிலான ரேம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

படக்கருவியின் தரம்

ரியல்மி X50 புரோ 5G ஸ்மார்ட்போனில் க்வாட் பின்புற கேமரா அமைப்பு உள்ளது, அதில் 64 மெகாபிக்சல் அளவிலான மெயின் சாம்சங் ஜி.டபிள்யூ 1 சென்சார் (எஃப் / 1.8, சிக்ஸ்-பீஸ் லென்ஸ்) + 8 மெகாபிக்சல் அளவிலான அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் + 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் + 2 மெகாபிக்சல் அளவிலான போர்ட்ரெய்ட் கேமராவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் டூயல் செல்ஃபி கேமரா அமைப்பு உள்ளது, அதில் 32 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 616 மெயின் சென்சார் (எஃப் / 2.5) + 8 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது.

5g

இணைப்பு, உணர்வி (சென்சார்), பேட்டரி

ரியல்மி எக்ஸ் 50 புரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 128 ஜிபி, 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 + சேமிப்பிடம் உள்ளது. இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை, 5ஜி (என்எஸ்ஏ / எஸ்ஏ மற்றும் மெயின்ஸ்ட்ரீம் பேண்ட்ஸ்), 4 ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

உணர்விகளைப் பொறுத்தவரை, அக்சலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், கைரோஸ்கோப், இன்-டிஸ்பிளே கைரேகை உணர்வி, ப்ராக்சிமிட்டி உணர்வி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த மொத்த அமைப்பும் 65W சூப்பர் டார்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4,200 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Last Updated :Apr 24, 2020, 9:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details