தமிழ்நாடு

tamil nadu

காரின் திரையில் கூகுள் வரைபடம் அறிமுகம்!

By

Published : Aug 12, 2020, 2:36 PM IST

சான் பிரான்சிஸ்கோ: காரின் திரையில் கூகுள் வரைபடங்களின் மூலம் ஐஓஎஸ் (iOS) பயனாளர்கள் பாதுகாப்பாக செல்லலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காரின் திரையில் கூகுள் வரைபடம்
காரின் திரையில் கூகுள் வரைபடம்

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இனி ஐஓஎஸ் (iOS) பயனாளிகள் காரின் திரை அல்லது கடிகாரத்தின் மூலம் கூகுள் வரைபடங்களின் உதவியுடன் பாதுகாப்பாகவும் எளிதாகவும் செல்ல முடியும்.

மேலும் காரில் உள்ள திரையில், ஒருவர் வரைபடம் மூலம் பயணிக்கும் போது, தங்களுக்கு பிடித்த பாடல்கள் மாற்றலாம், காரின் பின்புறம் உள்ள கேமராவின் காட்சிகளை பார்க்கலாம். காலண்டர் உள்ளிட்ட மற்ற வசதிகளையும் ஒரே நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

காரின் திரையில் கூகுள் வரைபடம்

எனவே சாலையில் கவனத்தை வைத்திருக்கும்போது உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களைப் பெற முடியும்" எனத் தெரிவித்துள்ளது.

காரின் திரையில் கூகுள் வரைபடம்

மேலும், இந்த வசதியானது வரும் வாரம் வெளியாகும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காரின் திரையில் கூகுள் வரைபடம்

இதையும் படிங்க: இந்தியாவில் விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு சேவையை அறிமுகப்படுத்திய கூகுள்!

ABOUT THE AUTHOR

...view details