தமிழ்நாடு

tamil nadu

என்ன மொபைல் பா இது! கிறங்கடிக்கும் வடிவமைப்புகளுடன் வெளியான எல்ஜி நிறுவனத்தின் விங், வெல்வெட்!

By

Published : Oct 29, 2020, 7:41 PM IST

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புது வரவாக அமைந்துள்ளது விங், வெல்வெட் ஆகிய இரு ஸ்மார்ட் கைபேசிகள். இரண்டு திரைகள் கொண்ட கைபேசி ஒன்று என்றால் மற்றொன்றோ சுழல் திரை அமைப்புடன் வெளிவந்து பயனர்களை கிறங்கடித்துள்ளது.

lg wing lg velvet
lg wing lg velvet

டெல்லி: எல்ஜி நிறுவனம் விங், வெல்வெட் எனும் புதிய பிரிமியம் ரக ஸ்மார்ட் கைபேசிகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தென்கொரிய நிறுவனமான எல்ஜியின் சமீபத்தில் புதிய ஸ்மார்ட் கைபேசிகளை அறிமுகப்படுத்தாமல் இருந்தது. இச்சூழலில், எல்ஜி விங், எல்ஜி வெல்வெட் ஆகிய இரு கைபேசிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு கைபேசிகளும் பயனர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த இரு கைபேசிகளில் கட்டமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை குறித்து அறிந்து கொள்ளலாம்:

  • செயற்கை நுண்ணறிவு கொண்ட கிம்பல் மோஷன் கேமரா
  • முன்னணி பாப் அப் படக்கருவி
  • ஹெக்சா மோஷன் நிலைப்படுத்தி
  • எல்ஜி கிரியேட்டரின் கிட்
  • கருப்பு நிலைப்படுத்தி
  • எல்ஜி முக்கோண ஒலி அமைப்பு

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய அடையாளமாக களம் காணும் ‘இன்’

  • திரையில் கைரேகை உணரி
  • ஐபி54 பாதுகாப்பு
  • குவால்காம் விரைவு மின்னூக்கி 4.0+ தொழில்நுட்பம்
  • வயர்லெஸ் மின்னூக்கி
  • ராணுவ தரம்
  • எல்ஜி பே

எல்ஜி வெல்வெட் சிறப்பமசங்கள்:

  • வளைந்த விளிம்புகள் கொண்ட ஒரு தனித்துவமான 3டி ஆர்க் வடிவமைப்பு
  • 3238 × 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன்
  • 20.5:9 திரை விகிதத்துடன் 6.8 அங்குல முழு எச்.டி+ சினிமா ஃபுல்விஷன் ஓ-லெட் தொடுதிரை
  • அட்ரினோ 630 GPU உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
  • IP68, MIL-STD 810G பாதுகாப்புச் சான்றிதழைக் கொண்டுள்ளது
  • இது எல்ஜி கைபேசி இரட்டை திரையைக் கொண்டிருக்கும்
  • ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

கூகுளின் பிரதான புதிய பிக்சல் போன்கள் 5ஜி இணைப்புடன்!

  • 4,300 mAh மின் சேமிப்புத் திறனுடன், 10W வயர்லெஸ் மின்னூக்கத்திற்கு துணைபுரிகிறது.
  • 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு வசதி
  • கூடுதலாக மைக்ரோ எஸ்டி 1 TB வரை விரிவாக்கக்கூடியது.
  • பின்பக்க படக்கருவி 48 மெகாபிக்சல், எல்.ஈ.டி ப்ளாஷ், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 5 மெகாபிக்சல் ஆழம் சென்சார்
    எல்ஜி விங்
  • முன்பக்க படக்கருவி 16 மெகாபிக்சல்களை கொண்டுள்ளது
  • 4 ஜி LTE, வைஃபை, என்எப்சி, புளூடூத், ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உடன் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை இதில் அடங்கும்.
  • கைபேசி 167.2×74.1×7.9 மிமீ பரிமாணங்களையும், 180 கிராம் எடையையும் கொண்டிருக்கிறது

எல்ஜி விங் சிறப்பம்சங்கள்:

  • 6.8 அங்குல 2440×1080 பிக்சல் ஃபுல் எச்.டி+ 20.5: 9 பி-ஓலெட் தொடுதிரை
  • 3.9 அங்குல 1240x1080 பிக்சல் 1.15:1 ஜி-ஓலெட் இரண்டாவது தொடுதிரை
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
  • அட்ரினோ 620 ஜிபியு
  • 8 ஜிபி ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி சேமிப்பு
  • சேமிப்பைக் கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 10
    எல்ஜி வெல்வெட்
  • 64 எம்பி பின்பக்க படக்கருவி, எல்இடி ஃபிளாஷ், f/1.8, OIS - 13 எம்பி 117° அல்ட்ரா வைடு லென்ஸ், f/1.9 - 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கிம்பல் மோட் கேமரா, f/2.2
  • 32 எம்பி பாப்-அப் முன்பக்கப் படக்கருவி, f/1.9
  • தொடுதிரையில் கைரேகை உணரிகள்
  • யுஎஸ்பி டைப் சி ஆடியோ
  • 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
  • 4000 mAh மின்கலத் திறன்
  • அதிவிரைவு மின்னூக்கம் 4.0

ABOUT THE AUTHOR

...view details