தமிழ்நாடு

tamil nadu

வருகிறது வாட்ஸ்அப் பே: ஜியோவுடன் சேர்ந்து போட்டி நிறுவனங்களை துவம்சம் செய்ய திட்டம்!

By

Published : Jul 31, 2020, 5:52 PM IST

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியுடன் இணைந்து சிறு குறு நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் திட்டத்தை வகுத்துவருகின்றனர். அதன் விளைவாக வாட்ஸ்அப் பே செயலி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Whatsapp pay, வாட்ஸ்அப் பே
வாட்ஸ்அப் பே

டெல்லி: 40 கோடி பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் வெளியிடவுள்ள ‘வாட்ஸ்அப் பே’ செயலி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஃபேஸ்புக், இந்தியாவின் ஜியோ நிறுவனத்தின் 9.9 விழுக்காடு பங்குகளை 43 ஆயிரத்து 574 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதுவே ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடாகும். இதன்மூலம் பெரிய தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரிலையன்ஸ் நிறுவனமும் தனது ஜியோ தளத்தின் மூலம் பல்வேறு அம்சங்கள் கொண்ட செயலிகளை பயனர்களுக்கு அறிமுகப்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜியோமார்ட் எனும் மின் வணிக செயலியை அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம், வாட்ஸ்அப் செயலியுடன் இணைந்து பயணிக்கும் பட்சத்தில், பயனர்களுக்கு இலகுவான சேவை கிடைக்க வழிபிறக்கும்.

ஜியோமார்ட் செயலி: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்கள் தரவிறக்கம் செய்யலாம்!

இந்தியாவில் தற்போது கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம், அமேசான் பே ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. முன்னணியில் இருக்கும் கூகுள் பே செயலி மூலம் தற்போது மாதம் 7.5 கோடி பயனர்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ்அப் பே

அதே நேரத்தில் இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை 40 கோடி பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால்தான், வாட்ஸ்அப் போன்ற செயலி பிற சேவைகளை வழங்கும்பட்சத்தில் அது போட்டி நிறுவன செயலிகளை துவம்சம் செய்துவிடும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

ABOUT THE AUTHOR

...view details