தமிழ்நாடு

tamil nadu

Whatsapp: பயனர்களின் வசதிக்காக புதிய அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்

By

Published : Apr 11, 2019, 2:50 PM IST

வாட்ஸ்அப் மூலம் பல குழுக்களில் இணைக்கப்படும் பயனர்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இதைக் களைய அந்நிறுவனம் புதிய அமைப்பை பயனாளிகளின் வசதிக்காக உருவாக்கியுள்ளது.

உலக அளவில் இருக்கும் வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்காக அந்நிறுவனம் புது அமைப்புகளை உருவாக்கி, மேம்படுத்தப்பட்ட பதிப்புகள் மூலம் அழித்துவருகிறது. அதில் வாட்ஸ்அப் மூலம் பல குழுக்களில் இணைக்கப்படும் பயனர்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருதை களைய புதிய அமைப்பை உருவாக்கி மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி உங்களது வாட்ஸ்

அப் அமைப்பில் நுழைந்து

Account > Privacy >Groups> - எனும் பிரிவுக்குச் சென்று அங்கு கீழ்காணும் விருப்பத்தை தெரிவு செய்ய வேண்டும்.

“Nobody,” “My Contacts,” or “Everyone.” -
இவற்றில் ’No Body’யைத் தெரிவு செய்தால் உங்களை குழுமங்களில் சேர்க்க நினைப்பவர்கள் உங்கள் அனுமதி கிடைத்த பிறகே சேர்க்க முடியும்.

’My Contact'யைத் தெரிவு செய்தால் உங்களது கணக்கில் இருக்கும் நபர்களது வாட்ஸ்அப் குழுமச் செய்திகள் மட்டுமே உங்களை வந்தடையும்.

’Everyone’யைத் தெரிவு செய்தால் உங்களை யார் வேண்டுமானாலும் குழுமங்களில் சேர்க்கலாம்.

வாட்ஸ்அப்பின் இந்தப் புதிய வசதி, பயனாளர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

Intro:Body:

https://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2019/apr/03/whatsapp-introduces-new-privacy-settings-for-groups-3126431.html

Conclusion:

ABOUT THE AUTHOR

...view details