பயனாளர்களின் உச்சபச்ச ஆதரவைத் தொடர்ந்து இந்த திசைக்காட்டி சாதனத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கூகுள் முடிவுள்ள செய்துள்ளது.
வழிச்செலுத்தல் திரையை செயல்பாட்டை கருத்தில் கொண்டு திசைக்காட்டி 2019ஆம் ஆண்டு ஆண்ட்ராய்ட் கருவிகளிலிருந்து நீக்கப்பட்டது. பயனாளர்கள் மேம் அப்ளகேஷனை பயன்படுத்தி தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு வழிகாட்டலை செயல்படுத்தும்போதும், திசைக்காட்டியின் முனை எந்த திசையை நோக்கி இருக்கிறோம் என்பதை காட்டும்.
இதையடுத்து தற்போது இந்த திசைகாட்டியின் பயன்பாடு குறித்து பயனாளர்கள் தங்களது நேர்மறையான கருத்துகளை முன்வைத்த நிலையில், அதன் பயன்பாட்டை மீண்டும் கொண்டு வந்திருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.
அதன்படி ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் தங்களது மென்பொருளை 10.62 வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொண்டால் மேம் அப்ளிகேஷனில் திசைகாட்டி சாதனத்தை செயல்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் உடன் வெளியாகும் லெனோவா டேப்லெட்!