தமிழ்நாடு

tamil nadu

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு

By

Published : Dec 29, 2020, 10:57 PM IST

ஈரோடு: சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு
சிறுமியிடம் பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பணிக்கம்பாளையம் பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அதே பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரபூல் மொண்டால் என்ற இளைஞரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரபூல் மொண்டால் அப்பெண்ணின் 8 வயதான குழந்தையிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக்கூறி, அப்பெண் கடந்த ஆண்டு ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ரபூல் மொண்டால் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ், கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி மாலதி இன்று(டிச.29) தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் ரபூல் மொண்டாலுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டணையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளார்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு:குற்றவாளிக்கு 3 மரண தண்டனைகள் விதித்து தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details