ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு:குற்றவாளிக்கு 3 மரண தண்டனைகள் விதித்து தீர்ப்பு

author img

By

Published : Dec 29, 2020, 8:08 PM IST

புதுக்கோட்டை: ஏம்பல் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சாமுவேல் ராஜாவிற்கு மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு:குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு:குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 6 மாதத்திற்கு முன், 30.6.2020 அன்று புதருக்குள் சடலமாக மீட்கப்பட்டார். அதை தொடர்ந்து போலீசார் விசாரணையில் அச்சிறுமியின் பக்கத்துவீட்டுக்காரர் ஆன 25 வயதுடைய சாமுவேல் ராஜா என்பவர் அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உறுதியானது.
அந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று(டிச.29) தீர்ப்பு வந்தது.

அதில் அந்த நபர் தான் குற்றத்தை செய்தார் என சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார். அதில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் மரண தண்டனையு‌ம்; போக்சோ சட்டத்தின் கீழ் மரண தண்டனையும்; 2019இன் கீழ் பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் திருத்தச் சட்டத்தின்கீழ் மரண தண்டனையு‌ம், இந்திய தண்டனைச் சட்டம் கடத்தல் பிரிவு 363இன் கீழ் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், குழந்தையைக் கொலை செய்து விட்டு சாட்சியத்தை மறைப்பதற்காக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 201இன் படி ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குழந்தையை வன்கொடுமை செய்து கொலை செய்தமைக்காக ஆயுள் தண்டனையும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் நான்கு மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், விதித்து தீர்ப்பளித்தார்.

இதன்மூலம் 3 மரண தண்டனையும், ஒரு ஆயுள் தண்டனையும், 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபாரதமும் என கொலை செய்யப்பட்டவருக்கு விதிக்கப்பட்டது.

மேலும் அச்சிறுமியின் தாயாருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ‘ரஜினியின் அறிவிப்பை முழுமனதோடு ஏற்றுக்கொள்ள முடியாது’ - ரஜினி ரசிகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.