தமிழ்நாடு

tamil nadu

சிசிடிவி காட்சிகளை கொண்டு மூகமுடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!

By

Published : Aug 29, 2019, 4:36 PM IST

வேலூர்: திருப்பத்தூரை அடுத்து இரண்டு நாட்களில் ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு வீடுகள் மற்றும் மதுபானக் கடையில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை மூலம் கொள்ளையர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

robbery

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி பகுதியில் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் தங்க நகையும் ஒரு லட்சத்து 30 ரூபாய் பணமும் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் அதே பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், முரளி என்பவர் வீட்டிற்கு சென்றனர்.

கொள்ளை அடிக்கப்பட்ட முரளியின் வீடு

அப்போது வீட்டில் சிசிடிவி கேமரா இருப்பதை அறிந்த திருடர்கள் சாதுரியமாக முகமூடிகளை அணிந்து கொண்டு, இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு அருகிலிருந்த வேல் என்பவரின் வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்தனர். அப்போது அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

சிசிடிவி காட்சி பதிவுகள்

பின்னர் இலக்கிநாயக்கன்பட்டி கூட் ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான மதுபான கடையில் 50ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் துறையினர் திருட்டு சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டனர்.

அப்போது, முரளியின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். ராணுவ வீரர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அடச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

மூகமுடி கொள்ளையர்கள் கைவரிசை

இதனையடுத்து, மீண்டும் அதே பகுதியில் இரண்டு வீடுகளில் திருட்டும் ஒரு வீட்டில் திருட்டு முயற்சியும் அரங்கேறியிருக்கும் சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருப்பத்தூர் அருகே திருட வந்தவர்களுக்கு கறிவிருந்து 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள், இருசக்கர வாகனம் திருடி சென்ற பாசமுள்ள திருடர்கள் தொடரும் திருட்டு சம்பவம் தூங்கும் போலீசார் அச்சத்தில் மக்கள்...Body:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் தங்க நகையும் ஒரு லட்சத்து 30 ரூபாய் பணமும் மர்மநபர்களால் திருடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் மர்ம நபர்கள் இரவு நேரம் முரளி என்பவர் வீட்டிற்கு சென்ற திருடர்கள் வீட்டில் சமைத்து வைக்கப்பட்டிருந்த மீன் குழம்பு மற்றும் களி விருந்தை தெம்பாக சாப்பிட்டுவிட்டு முரளி வீட்டில் திருட முயற்சி செய்து உள்ளனர். அப்போது முரளி வீட்டில் கண்காணிப்பு கேமரா இருப்பதை அறிந்த திருடர்கள் சாதுரியமாக முகமூடிகளை அணிந்து கொண்டு (ஸ்ப்ளெண்டர் பிளஸ் ) இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு அருகில் இருந்த முருகன் மகன் வேல் என்பவரின் வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்து உள்ளனர். அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் வருவதை அறிந்து திருடர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்று லக்கி நாயக்கன்பட்டி கூட்டு ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான மதுபான கடையில் 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிக்கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி போலீசார் திருட்டு சம்பவம் குறித்து முரளி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை வைத்து திருடர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு அதே பகுதியில் ராணுவ வீரர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி இருந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் இரண்டு வீடுகளில் திருட்டும் ஒரு வீட்டில் திருட முயற்சியும் செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் ரோந்து பணி காவலர்கள் தங்கள் பணியை சரியாக செய்யாத காரணத்தினாலே இப்பகுதியில் தொடர் திருட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் காவல்துறை மீது குற்றம்சாட்டுகின்றனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details