தமிழ்நாடு

tamil nadu

கந்துவட்டி கொடுமை: சிறுநீரகத்தை விற்ற குஜராத் ஆசிரியர்!

By

Published : Aug 17, 2020, 9:36 PM IST

பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரு ஆசிரியர் தனது சிறுநீரகத்தை விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கந்துவட்டி கொடுமை
கந்துவட்டி கொடுமை

பனஸ்கந்தா (குஜராத்):பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரு ஆசிரியர் தனது சிறுநீரகத்தை விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தராத் கோடா கிராமத்தின் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜபாய் புரோஹித். ஒரு தனியார் கந்துவட்டி கும்பலிடம் இருந்து ரூ.3 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். ஒரு வருடத்தில், வட்டியுடன் அசல் தொகை இரட்டிப்பாகியுள்ளது.

நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல், தனது சிறுநீரகத்தை விற்க முடிவு செய்த ஆசிரியர், சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.

இச்சூழலில் இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சிறுநீரகத்தை வாங்க ஆர்வம் காட்டியதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, புரோஹித் இலங்கைக்குச் சென்று தனது சிறுநீரகத்தை ரூ .15 லட்சத்திற்கு விற்றுள்ளார்.

தொடரும் அவலம்: உ.பி.-யில் 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை!

பின்னர் ராஜபாய் தான் வாங்கிய அசலுடன் சேர்த்து வட்டி பணத்தையும் கந்துவட்டி கும்பலுக்கு கொடுத்துள்ளார்.

ஆனால், கந்துவட்டி கும்பல் அவரிடமிருந்து அதிக பணம் கேட்டு நச்சரித்துள்ளனர். இதனால் மிகுந்த மனவேதனைக்குள்ளான ஆசிரியர், காவல் துறையின் உதவியை நாட முடிவெடுத்துள்ளார்.

தொடர்ந்து தன்னிடம் அதிக பண வசூலில் ஈடுபட்ட ஹர்ஷத் வஜீர், தேவா ரபாரி, ஓகா ரபாரி, வஸ்ரம் ரபாரி ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காவல் துறையினர் இவ்வழக்கை விசாரிக்கத் தொடங்கியபோதுதான் ஆசியர் இலங்கைக்குச் சென்று சிறுநீரகத்தை விற்றது உறுதிசெய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details