தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் ஆம் ஆத்மி நிர்வாகி மீது ஊபா சட்டம் பாய்ந்தது!

By

Published : Apr 22, 2020, 8:40 PM IST

தாகிர் உசைன்

டெல்லியில் நடந்த வன்முறையில் உளவுத்துறை அலுவலர் அங்கித் சர்மா கொலை வழக்கில் ஆம் ஆத்மியின் முன்னாள் நிர்வாகியான தாகிர் உசைன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மீது ஊபா சட்டம் பாய்ந்துள்ளது.

டெல்லி: உளவுத்துறை அலுவலர் அங்கித் சர்மா கொலை வழக்கில் ஆம் ஆத்மியின் முன்னாள் நிர்வாகியான தாகிர் உசைன் சட்டவிரோத செயல்பாடுகளுக்கான தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் நாடெங்கும் நடைபெற்றது. இதில் டெல்லி வட கிழக்குப் பகுதியில், நடந்தப் போராட்டத்தில் சட்ட எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில், கடும் வன்முறை வெடித்தது. இதில் உளவுத்துறை அலுவலர் அங்கித் சர்மா உள்ளிட்ட 53 பேர் உயிரிழந்தனர்.

சாதுக்கள் கொலை: டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது மனித உரிமைகள் ஆணையம்!

கலவரத்தின் போது நடந்த வன்முறை சம்பவத்தால் உயிரிழந்த அங்கித் சர்மா, உடலில் ஏராளமான காயங்களுடன் கழிவு நீர் ஓடையில் சடலமாகக் கிடந்தார். இந்தக் கொலையில் அப்போது ஆம் ஆத்மி கட்சியில் இருந்த கவுன்சிலர் தாகிர் உசைன் மீது, சந்தேகம் உள்ளதாக அங்கித் சர்மாவின் பெற்றோர் அளித்தப் புகாரின் அடிப்படையில், தாகிர் உசைன் வீடு சோதனை செய்யப்பட்டது.

சோதனையில் அவர் வீட்டில் கிடைத்த ஏராளமான கற்கள், பாட்டில்கள் போன்ற ஆயுதங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் ஆம் ஆத்மி கட்சி, அவரைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது. இதனையடுத்து தாகிர் உசைன் டெல்லி காவல் துறையினரால், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.

கண்ணை விட துல்லியமான படக்கருவி வெளியிடவுள்ள சாம்சங்

இச்சூழலில் இந்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் மீது இப்போது புது வழக்காக சட்டவிரோத செயல்பாடுகளுக்கான தடுப்புச் சட்டம் (ஊபா) போடப்பட்டடுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details