தமிழ்நாடு

tamil nadu

பிரமிக்க வைக்கும் "வியாழன்" கோளின் புகைப்படங்கள்... ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அடுத்தபணி

By

Published : Aug 24, 2022, 7:10 PM IST

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்த வியாழன் கோளின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

webb
webb

உலகிலேயே மிகப்பெரிய சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை கடந்த டிசம்பர் மாதம் நாசா விண்ணில் செலுத்தியது.

இந்த தொலைநோக்கி எடுக்கும் அரிய புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது. அண்மையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டது. இந்தப் புகைப்படங்கள் உலகளவில் வைரலாகப் பகிரப்பட்டன.

இந்த நிலையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வியாழன் கோளை துல்லியமாக படம் பிடித்துள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் அரிய புகைப்படங்களை நாசா வெளியிட்டது. இந்தப் புகைப்படத்தில் வளையங்கள், சிறிய செயற்கைக்கோள்கள், அரோராக்கள் மற்றும் விண்மீன் திரள்களும் காணப்படுகின்றன.

இந்த புகைப்படங்கள் இவ்வளவு சிறப்பாக வரும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், வியாழன் கோளின் பெரும்பாலான விவரங்களை அந்தப் படத்தில் காணலாம் என்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:குழந்தைகளை குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்... லான்செட் எச்சரிக்கை...

ABOUT THE AUTHOR

...view details