தமிழ்நாடு

tamil nadu

இந்த 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு

By

Published : Jan 12, 2023, 9:13 AM IST

Updated : Jan 12, 2023, 12:07 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம்

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் மரணத்தை தொடர்ந்து இரு இந்திய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இயங்கி வரும், மேரியன் பயோடெக்(Marion Biotech) என்ற தனியார் நிறுவனத்தின் தயாரிப்பான டோக்-1 மேக்ஸ்( syrup Dok1 Max) என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன், மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர், மேரியன் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் புகாருக்கு ஆளான ‘டோக்-1 மேக்ஸ்’ மற்றும் அம்ப்ரோனால்(Ambronol Syrup) என்ற இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழு பரிசோதித்தது. அதில், இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இரண்டு மருந்துகளும் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு உகந்தது அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக புகாருக்கு ஆளான மேரியன் பயோடெக் நிறுவனத்தில், சம்பந்தப்பட்ட டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தனியார் ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி - கந்து வட்டி கொடுமையா?

Last Updated :Jan 12, 2023, 12:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details