தமிழ்நாடு

tamil nadu

கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே மறைவு

By

Published : Dec 30, 2022, 8:09 AM IST

உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே உயிரிழந்தார்.

கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே உயிரிழப்பு
கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே உயிரிழப்பு

சாவ் பாலோ: உலக புகழ்பெற்ற பிரேசிலிய கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே(82) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். 2021ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பீலேவுக்கு பெருங்குடல் கட்டி அகற்றப்பட்டது. அதன்பின் கடந்த நவம்பர் 29ஆம் தேதி கரோனா மற்றும் சுவாச நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 30) நள்ளிரவு உயிரிழந்தார்.

அவரது உடல் சாவ் பாலோவில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வரும் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அதன் பின் பீலேவின் சொந்த ஊரான சாண்டோஸில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்த பீலே, பிரேசிலுக்காக 1958, 1962 மற்றும் 1970 என மூன்று முறை உலக கோப்பையை பெற்று தந்துள்ளார். தனது வாழ்நாளில் பிரேசிலுக்காக 95 போட்டிகளில் விளையாடிய பீலே, 77 கோல்களை அடித்துள்ளார். பீலேவின் மறைவிற்கு சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் கால்பந்தாட்ட ரசிகர்கள் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் தாயார் மறைவு

ABOUT THE AUTHOR

...view details