தமிழ்நாடு

tamil nadu

ஒபாமாவின் சமையல்காரர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு - ஒபாமா தம்பதியர் வருத்தம்!

By

Published : Jul 25, 2023, 1:57 PM IST

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சமையல்காரரான டஃபாரி கேம்ப்பெல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்நிகழ்வு குறித்து ஒபாமா வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் சமையல்காரர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
ஒபாமாவின் சமையல்காரர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

எட்கார்டவுன் (அமெரிக்கா):முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தனிப்பட்ட சமையல்காரர் மார்தாஸ், வயின்யார்டில் உள்ள ஒபாமா வீட்டிற்கு அருகே குளத்தில் மூழ்கி இறந்தார். நேற்று (ஜூலை 24) எட்கார்டவுன் கிரேட் குளத்தில் இருந்து ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சடலத்தை ஆராய்ந்த மசாசூசெட்ஸ் மாநில காவல் துறையினர், அந்த சடலம் வர்ஜீனியாவின் டம்ஃப்ரைஸைச் சேர்ந்த டஃபாரி கேம்ப்பெல் (45) என்பதை உறுதிப்படுத்தினர்.

இது பற்றி கூறிய முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா, “டஃபாரி கேம்ப்பெல்லை எங்கள் குடும்பத்தில் ஒருத்தவராக கருதி வந்தோம். நாங்கள் முதலில் அவரை அமெரிக்க வெள்ளை மாளிகையில் சந்தித்தோம். அவர் வெள்ளை மாளிகையில் ஒரு திறமையான சோஸ் செஃப் (சோஸ் செஃப் அல்லது சோஸ் சமையல்காரர் என்பவர், ஒரு ஹோட்டல் அல்லது பெரிய உணவகத்தின் சமையலறையில் இரண்டாவது மிக முக்கியமான சமையல்காரர் ஆவார்).

இதையும் படிக்க:அமெரிக்காவில் மின்னல் தாக்கி இந்திய மாணவி மூளை சேதம்! சொந்த ஊர் அழைத்து வர பெற்றோர் போராட்டம்!

டஃபாரி கேம்ப்பெல் சமையற்கலை மீது ஆர்வமுள்ளவராகத் திகழ்ந்தார். சமையல் கலையில் மிகவும் திறமையான இவர், தனது சமையலின் மூலம் மக்களை ஒன்றிணைக்கும் திறன் கொண்டவர்” என ஓபாமா தம்பதியர் கூறினர். மேலும் கூறிய ஒபாமா தம்பதியர், அடுத்த ஆண்டில் கேம்ப்பெல் இரக்க குணம் கொண்ட ஒரு அன்பான நபர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அவர் எங்கள் வாழ்க்கையை கொஞ்சம் ஒளிமயமாக்கினார்.

நாங்கள் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறத் தயாரானபோது, கேம்ப்பெல்லை விட்டு பிரிய மனம் ஒப்புக் கொள்ளவில்லை. ஆகையால், நாங்கள் கேம்ப்பெல்லை எங்களுடன் வருமாறு கேட்டுக் கொண்டோம். அவரும் அதற்கு தாராளமாக வருகிறேன் என்று ஒப்புக்கொண்டார். அன்றில் இருந்து அவர் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறார், எங்கள் குடுபத்தில் ஒருத்தர். ஆனால் இன்று அவர் இறந்து விட்டார். அவரின் இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது” என கூறி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார், கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 23) குளத்தில் தேடுதல் பணி தொடங்கியதாகவும், நேற்று குளத்தின் கரையில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் கேம்ப்பெல்லின் உடல் மீட்கப்பட்டது என்றும் கூறி உள்ளனர். மேலும் கேம்ப்பெல் லைப் ஜாக்கெட் அணியவில்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க:இந்தியாவில் இருந்து மாயமான பழங்காலப் பொருட்களை மீட்க 'கலாச்சார பாரம்பரிய அணி' - நாடாளுமன்ற குழு பரிந்துரை!

ABOUT THE AUTHOR

...view details