ETV Bharat / bharat

அமெரிக்காவில் மின்னல் தாக்கி இந்திய மாணவி மூளை சேதம்! சொந்த ஊர் அழைத்து வர பெற்றோர் போராட்டம்!

author img

By

Published : Jul 20, 2023, 3:31 PM IST

அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காக சென்ற இந்திய மாணவில் மின்னல் தாக்கி மூளை சேதம் அடைந்த நிலையில், அவரை சொந்த ஊருக்கு அழைத்து வர பெற்றோர் அரசின் உதவியை நாடி உள்ளனர்.

Lightning
Lightning

ஹூஸ்டன் : மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவி, மின்னல் தாக்கி மூளை சேதம் அடைந்த நிலையில், அவரை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள் போராடி வருகின்றனர்.

சுஸ்ருன்யா கொடுரு என்ற இந்திய மாணவி அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில்நுட்பம் பயின்று உள்ளார். கல்லூரி படிப்பு முடிவடைந்த நிலையில், இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக காத்திருந்து உள்ளார். கடந்த ஜூலை 4ஆம் தேதி, சான் ஜாசிண்டோ நினைவுச் சின்னத்தை சுற்றிப் பார்க்க சென்று உள்ளார்.

அப்போது திடீரென மின்னல் தாக்கி அருகில் இருந்த குளத்தில் சுஸ்ருன்யா தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் இதைக் கண்டு உடனடியாக குளத்தில் விழுந்த சுஸ்ருன்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மின்னல் தாக்கியதில் சுஸ்ருன்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மூளை சேதம் அடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மின்னல் பலமாக தாக்கியதால் சுஸ்ருன்யா சுயநினைவு இழந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். சுயமாக சுஸ்ருன்யாவால் மூச்சு விட முடியாத சூழல் உருவாகி உள்ளதால் வென்டிலேட்டர் மூலம் அதாவது செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அவர் மூச்சு சுவாசித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

சுஸ்ருன்யாவின் பெற்றோர் இந்தியாவில் உள்ளதாகவும், நடுத்தர வசதி கொண்ட அவரது பெற்றோரால் அமெரிக்கா வர முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுஸ்ருன்யாவின் நண்பர்கள் இணைந்து தனியார் தொண்டு அமைப்பு மூலம் நிதி திரட்டி அவரது சிகிச்சைக்காக செலவழித்து வருவதாக கூறப்படுகிறது.

சுஸ்ருன்யா சுயநினைவுக்கு திரும்ப எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வார் என முழுமையாக தெரியவராத நிலையில், அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்ள பெற்றோர் விரும்புகின்றனர். அதேநேரம் சுஸ்ருன்யாவை இந்தியா கொண்டு வர போதிய பணம் இல்லாததால் அரசின் உதவியை நாடி உள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும், மின்னல் தாக்கி ஆண்டுக்கு 43 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்து உள்ளது. மின்னல் தாக்கி பலர் உயிரிழந்ததாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பவர்கள் பல்வேறு உடல் குறைப்பாடுகளுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : SC on Manipur violence: அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றம் எடுக்கும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.