தமிழ்நாடு

tamil nadu

"நிலநடுக்கத்தின்போது உயிரை பணயம் வைத்து குழந்தைகளை காப்பாற்ற முயன்ற செவிலித் தாய்கள்''

By

Published : Feb 12, 2023, 8:49 PM IST

துருக்கியில் நிலநடுக்கத்தின்போது குலுங்கும் மருத்துவமனையில், இரண்டு செவிலியர்கள் உயிரை பணயம் வைத்து இங்குபேட்டர்களில் உள்ள குழந்தைகளை காப்பாற்ற போராடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Nurses
Nurses

"நிலநடுக்கத்தின்போது உயிரை பணயம் வைத்து குழந்தைகளை காப்பாற்ற முயன்ற செவிலித் தாய்கள்''

துருக்கி: துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ஆம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் இருநாடுகளும் பேரழிவைச் சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கான கட்டடங்கள் நொறுங்கி, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இரு நாடுகளிலும் கடந்த ஒரு வாரமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இடிபாடுகளில் இருந்து கொத்துக் கொத்தாக சடலங்கள் மீட்கப்படுகின்றன. கடும் குளிருக்கு மத்தியில் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய(பிப்.12) நிலவரப்படி இருநாடுகளிலும் நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29,000ஐ கடந்துள்ளது.

இந்த நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்தின்போது இரண்டு செவிலியர்கள் இங்குபேட்டர்களில் உள்ள பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற போராடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் துருக்கியில் கடந்த 6ஆம் தேதி, 7.7 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட ஒரு மருத்துவமனையில் பதிவானதாகத் தெரிகிறது.

இதில் நிலநடுக்கத்தால் மருத்துவமனை குலுங்கும் வேளையில், இரண்டு செவிலியர்கள் அவசரமாக ஐசியுவில் நுழைகின்றனர். பின்னர் அங்குள்ள இங்குபேட்டர்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அதில் உள்ள குழந்தைகளை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். நிலநடுக்கத்திலிருந்து தப்பியோட நினைக்காமல் உயிரை பணயம் வைத்து குழந்தைகளை காப்பாற்ற முயற்சித்த துருக்கி செவிலியர்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த செவிலியர்கள் டேவ்லெட் நிஜாம், காஸ்ல் காலிஸ்கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகளை துருக்கியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: Turkey Earthquake: பூகம்பத்தில் பூத்த பூ.. நிலநடுக்கத்தில் பிறந்த அதிசய குழந்தை!

ABOUT THE AUTHOR

...view details