தமிழ்நாடு

tamil nadu

ரஷ்யாவுடன் இணையும் 4 உக்ரைன் பகுதிகள்

By

Published : Sep 29, 2022, 5:32 PM IST

உக்ரைனில் ரஷ்ய படைகளின் பிடியில் உள்ள நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நான்கு பகுதிகளும் ரஷ்யாவுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kremlin
Kremlin

மாஸ்கோ:உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போரில், உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. தற்போது வரை போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யப்படைகள் கைப்பற்றிய உக்ரைனின் சில பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா முடிவு செய்தது.

இதையடுத்து கடந்த 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை, உக்ரைனில் ரஷ்ய படைகளின் பிடியில் உள்ள டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்ஸான் மற்றும் ஸாப்போரிஸியா ஆகிய பகுதிகளில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், பொது வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி பெற்றுவிட்டதாகவும், குறிப்பிட்ட நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க பெரும்பாலான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புதின் நாளை(செப்.30) வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கமலா ஹாரிஸ் நாளை தென்கொரியா செல்லவுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை

ABOUT THE AUTHOR

...view details