தமிழ்நாடு

tamil nadu

ஆஸ்திரேலிய, இந்திய கல்வி கவுன்சிலின் 6ஆவது கூட்டம்... மத்திய கல்வி அமைச்சர் பங்கேற்பு...

By

Published : Aug 22, 2022, 4:45 PM IST

ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, 6ஆவது கல்வி கவுன்சில் கூட்டத்துக்கு மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்.

Education Minister Dharmendra Pradhan co chairs 6th meeting of Australia India Education Council
Education Minister Dharmendra Pradhan co chairs 6th meeting of Australia India Education Council

சிட்னி:ஆஸ்திரேலியாவுக்கு மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 4 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சர் ஜேசன் கிளாருடன் மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்ற, 6ஆவது கல்வி கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இந்த சந்திப்பின்போது, கல்வி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்கள், திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் நிறுவனங்களை அமைக்க முன்வருமாறு பிரதான் வேண்டுகோள் விடுத்தார். இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருமாறு ஜேசன் கிளாருக்கு அழைப்பு விடுத்தார். கல்வியை முக்கியத் தூணாக மாற்றும் நோக்கத்தில், இந்தியா, ஆஸ்திரேலியா இடையே, கற்றல், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பையும் வேண்டினார்.

கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி துறைகளில் முன்னுரிமை அளித்து முன்னேறுவதற்கும், ஈடுபாடுகளை அதிகரிப்பதற்கும், ஆஸ்திரேலியா - இந்தியா கல்வி கவுன்சில் மிகவும் சிறந்த இடம். ஆஸ்திரேலியா - இந்தியா கல்வி கவுன்சிலின் 7ஆவது கூட்டத்தை அடுத்தாண்டு இந்தியாவில் நடத்த ஆஸ்திரேலியா முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:டெல்லி மதுபான ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை... கேசிஆர் மகள் கவிதா விளக்கம்...

ABOUT THE AUTHOR

...view details